Home>> Naadi Astrology

நாடி ஜோதிடம்

நாடி முறையில் துல்லியமாக உங்களுடைய ஜாதகத்தை கணித்து தரப்படும். எந்த காலகட்டத்தில் நீங்கள் உயர்வீர்கள், எந்த காலகட்டத்தில் உங்களுக்கு புகழ், இரண்டாவது பணம் இந்த மாதிரி அனைத்தும் வரும் என்பதை குழந்தை பாக்கியம் அனைத்தும் நாடி ஜோதிடம் மூலமாக துல்லியமாக நாம் எடுக்க முடியும்.

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஒரு பழமையான ஒரு ஜோதிட கலையே நாடி ஜோதிடம் ஆகும். தென்னிந்திய முன்னோர்களால் கணிக்கப்பட்ட பனை ஓலைகளால் எழுதப்பட்ட குறிப்புகள் மூலம் கை விரல் ரேகை மூலம் பார்க்கப்படும் இம்முறையானது ஒரு நபரின் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால நடைமுறையை கணிப்பதே ஆகும், பண்டைய இந்து முனிவர்கள் எழுதப்பட்ட இம்முறையானது பல நபர்களின் நபிக்கையாக திகழ்கிறது. இது பற்றிய பல புராணங்கள் இந்தியாவில் பல இடங்களில் சிதறி கிடக்கின்றன அவற்றை சில வகைகள் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டன

நங்கள் உங்கள் கை விரல் ரேகை மூலம் நாடி ஜோசியம் பார்த்து கணிதம் செய்து தசா கணக்கினன எடுத்து பலன் சொல்லும் அனுபவம் வாய்ந்த ஜோதிடர்.

நாடி ஜோசியம் பார்க்கும் வழிமுறைகள் 

முதல் காண்டம் – வாழ்க்கையின் பொதுப்பலன்கள்.

இரண்டாம் காண்டம் – குடும்பம், வாக்கு, கல்வி, ஆகியவற்றின் பலன் பற்றி அறிவது

மூன்றாம் காண்டம் – சகோதரர்கள் தொடர்பான விடயங்கள்.

நான்காவது காண்டம் – தாய், சொத்துக்களின் பயன்பாடு , வீடு மறும் வாழ்க்கையில் அடையும் சுகங்கள் பற்றிய தகவல் அறிய பயன்படுகிறது

ஐந்தாம் காண்டம் – பிள்ளைகள் வாழ்க்கை, கல்வி , எதிர்காலம் மற்றும் செல்வம் பற்றி கூறுகிறது.

ஆறாம் காண்டம் – வாழ்க்கையில் உள்ள எதிரிகள், நோய், கடன் பற்றி கூறுகிறது.

ஏழாம் காண்டம் – திருமணம் மற்றும் வாழ்க்கைத்துணை சம்மந்தப்பட்ட நிகழ்வினை பற்று கூறுகிறது.

எட்டாம் காண்டம் – உயிர்வாழும் காலம், ஆபத்துக்கள் பற்றி கூறுகிறது.

ஒன்பதாம் காண்டம் – தந்தை, செல்வம், யோகம், குரு பற்றி கூறுகிறது.

பத்தாவது காண்டம் – தொழில் பற்றி கூறுகிறது.

பதினோராம் காண்டம் – வாழ்வில் அடையப்போகும் லாபங்கள் மற்றும் நட்டங்கள் பற்றி கூறுகிறது.

பன்னிரண்டாம் காண்டம் – செலவு, அடுத்த பிறப்பு, பற்றி கூறுகிறது