Home>> Marriage matching

திருமண பொருத்தம்

எங்கும் இல்லாத அளவில் ஒரு ஆண், பெண் திருமண பொருத்தத்தை

நாங்கள் AK Presannam Jothidam யாருமே சொல்லாத அளவிற்கு துல்லியமாக பார்த்து தரப்படும். பல ஆண்டுகளாக, பல நபர்களுக்கு, பலவித பொருத்தங்களை பார்த்து, பல திருமணங்களை நடத்தி, பல நபர்களின் வாழ்க்கையை பலவித இன்பத்துடன் தொடர வழிவகுத்துள்ளோம்.

திருமணம் என்ற பேச்சு எழும்போது அடிக்கடி இந்த வார்த்தை உங்கள் காதை எட்டும், பொதுவாக இந்து மத திருமண சடங்குகள்படி பத்து பொருத்தங்கள் பார்க்கப்படும் அதில் குறைந்தபட்சம் எட்டு பொருத்தங்கள் சரியாக இருக்கவேண்டும் என்பது ஜாதக வழக்கம், பத்து பொருத்தங்களும் சரியாக இருந்தால் அது உத்தமான ஜாதகம் என்பார்கள் அது அணைத்து பொருத்தங்களும் சரியாகஇருந்தால் மிக வலுவான திருமணபந்தம் என்பார்கள்.

 

பத்து பொருத்தங்கள் என்னென்ன?

தினப்பொருத்தம்: ஆண் மற்றும் பெண் இவர்களின் ஆயுட்காலம் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்துக் கொள்ள பார்க்கப்படுகிறது

கணப் பொருத்தம்: கணவன்/மனைவியாக வரப்போகும் நபர் எப்படிப்பட்ட குணத்தை பெற்றிருப்பார்கள் பற்றி இந்த பொருத்தத்தில் தெரிந்துகொள்ளலாம்

மகேந்திரப் பொருத்தம்: இது மிகவும் முக்கியமான பொருத்தம் ஆகும், இந்த பொருத்தம் இருந்தால்தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

யோனிப் பொருத்தம்: இந்த பொருத்தம் கணவன்/மனைவிக்குள் தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக் கூடியது

ராசிப் பொருத்தம்: வம்சம் விருத்தியடையுமா என்பதை சொல்லக் கூடியது ஆன் மற்றும் பெண் இருவருக்கும் ராசி ஒன்று எனில் நட்சித்திரம் வேறு இருக்க வேண்டும்

ராசி அதிபதிப் பொருத்தம்: குடும்ப வாழ்வு எந்தளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கும் என பார்க்க பயன்படுத்த படுகிறது

வசியப் பொருத்தம் : ஆண் மற்றும் பெண் இவர்களின் அன்யோன்யம் இருக்குமா, இல்லையா என்று பார்ப்பதற்கு உதவுகிறது.

ரச்சுப் பொருத்தம்: கணவனின் ஆயுள் காலம் மற்றும் பெண்ணின் மாங்கல்யம் பாக்கியத்தை இந்த பொருத்தம் குறிக்கிறது.

வேதைப் பொருத்தம்: ஆண் மற்றும் பெண் இவர்களின் இன்ப – துன்பங்கள் எவ்வாறு அமையும், என பார்க்க பயன்படுகிறது